வெள்ளி, 11 மார்ச், 2011

இந்த இடுகை சராசரி மனித மனத்தில் தொடர்ந்து வந்த நிகழ்வு . அநேகமாக இந்த கேள்வி இல்லாத மனித மனமே இல்லை எனலாம் . நான் என்னிடம் , சக மனிதர்களிடம் கண்டு வியந்த, குழம்பிய தருணங்களை பகிர வேண்டிஇந்த வலைப்பதிவை தொடக்கி உள்ளேன் . இதில் வரும் அனுபவங்களை நிஜ வாழ்வின் பிரதிபலிப்புகள் எனலாம் . ஆனால் , ரிஷி 
மூலம் , நதி மூலம் மட்டும் அந்த பிரபஞ்ச ரகசியங்களில் சேர்ந்து  போகட்டும். 
உங்கள் கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன. வார்த்தைகளில் வன்முறை வேண்டுகிறவர்கள் தவிர்க்க  வேண்டுகிறேன். வன்மம் வேண்டுகிறவர்கள்  என்ன செய்ய காலப்போக்கில் தெரிந்து kolvome .
இது ரிஷிகள்,தியானங்களின் கருப் பொருள் போல கணம் மிகுந்த தேடல் அல்ல.சாதாரண,பலவீனங்கள்  நிறைந்த மனித மனத்தின் கூக்குரல்கள்;முனகல்கள்; வாதங்களே .
இங்கு ,"loudthinking ",என்று உடன் பணிபுரிந்த ஒருவரின் வார்த்தைப் பிரயோகத்தை கடன் வாங்கி கொள்வதில் தவறில்லை.
 ஆண்மை, பெண்மை பற்றிய மயக்கங்கள் வந்ததே.
 தாய்மை பெண்களுக்கு மட்டும் தான் இருக்கா?தாய்மை பற்றி உலகின் கண்ணோட்டம் நம் திருவள்ளுவர் சொன்னபடியா? இல்லை அது வேறா ?
விசுவின் அரட்டை அரங்கத்தில் கேட்டது தாய் ஈன்றபொழுதில் பெரிது உவக்கும்    "சான்றோன் எனக்கேட்ட தாய்"  , தந்தையின் கடமை   அவையில் முந்தியிருப்ப செய்வதாம். அப்பாவுக்கும் பயபுள்ள நல்லவன்னு சொன்னா சந்தோஷம்தான் ஆனாலும்,  மகன் நல்ல வேலைக்கு போகணும்ன்னு படுற பாடு ரொம்பவே ?
அம்மாங்க,மட்டும்  களவாணிசரண்யா மாதிரி,' 
ஆடிபொறந்தா,அப்பசி பொறந்தா topla போயிருவான்னு" புள்ளங்க பண்ற 
அடாவடியை சரிகட்டும்போது , "எம்புள்ள நல்லவனாகனும்னு " 
சாமி கும்பிடுவாங்கபோல.
  
 ஏன் அப்பாக்கள் மகன்கள் முன்னே ஒரு "அய்யனாரகவே", அதுவும் 'அடாவடி அய்யனராவே',  தெரிகிறார்கள்.அதிலும் பெரும்பாலும் அவர்கள் அப்பாக்கள் சொன்னது, நடந்ததன் பிம்பங்களாக இருப்பார்கள் ; விதிவிலக்குகள் இருப்பார்கள். ஆக, அய்யனார் அப்பாவின் உள்ளே இருப்பது அவரின் அப்பாவா,இல்லை அவர் வாழ மறுத்த அவருடைய அப்பாவின்  மகனா ? ஹி ,ஹி சரியா குழப்பியாச்சா ?
என்னசெய்யநான் இப்படிதான் குழம்பி போறேன். எங்கப்பா ," டேய் , நானெல்லாம் எங்கப்பா  சொன்னதைக்கேட்டு , இப்ப இப்படி இருக்குறேன். நீ 
எங்க, உருப்படப் போறே?ன்னு"உறுமுனாறு;  தம்அடிக்குறது தெரிஞ்சப்போ  எங்க தாத்தா, " எம்மா, ஒம்புருஷனை இந்த சிகரெட்டை விடச் சொல்ல மாட்டியா? என்னாலே அவனை திருத்த முடியலன்னு " அம்மாகிட்ட அம்மா வந்த புதிசில சொன்னாராம்.. 
அப்போ அப்பா மனசில இப்ப இருக்கிறது "யாரு"?